Thursday, February 5, 2015

தனித்து இயங்கும் தமிழ்
தமிழ் மொழி ஒன்றே வடமொழி பிரளயத்திற்குட்பட்டு கன்னடம் ,தெலுங்கு ,துளு ,மலையாளம்  முதலிய மொழிகளாக மாறி உள்ளன .சங்க கால  தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் அதிக வேறுபாடு உண்டு .மணிபிரவாள நடை என்னும் ஒரு  நடையும் ஒருகால் வழங்குவதாயிற்று .இதில் சரிக்கு  சரி தமிழும் சமஸ்கிருதமும் கலக்கப்பட்டன .இந்நடையை தமிழ்ப்புலவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை . தமிழ்ப்புலவர்கள் இதனை எதிர்த்து நிற்காவிடில் இன்று தமிழ் மொழி என ஓன்று இல்லாமல் போயிருக்கும் .மேற்கு கரையிலுள்ள மக்கள் இதனை அனுமதித்ததாலேயே தமிழ் கெட்டு மலையாள மொழியாக மாறிற்று என சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள் .இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ்  நடையில் அதிக வடசொற்களை காணலாம் .பத்து ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையில் பல  வடசொற்கள் களையப்பட்டுள்ளன.இன்று வடமொழி கலப்பில்லாத தமிழ் நடை எழுதுவதே சிறந்த நடை எனப்  போற்றப்படுகிறது. இன்று பெரும்பாலும்
தூய்மையாகவே கற்றோரால் எழுதப்பட்டு வருகின்றது .
தமிழ் அறிஞர் ந.சி .கந்தையாபிள்ளை 1948

திராவிடம் என்றால் என்ன ? நூலில்  பக்கம் 48

No comments:

Post a Comment